10, 12-ம் வகுப்புகளில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் 20% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் வரவேற்பு
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை
இதுநாள் வரை தமிழ் வழியில் பட்டப்படிப்பைப் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டப் படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை அறிவிப்பு தமிழ்ப்படித்தோர்களுக்கு மிகப்பெரிய வாய்பபாக அமையும் .
பட்டப் படிப்பைத் தகுதியாகக் கொண்ட தேர்வுகளில் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், அரசு வேலைக்காக பட்டப்படிப்பை தமிழில் படித்ததாகவும் அதைக் கொண்டு, இட ஒதுக்கீட்டில் இடம் பிடித்ததினால் பலலட்சம் பேர் முறையாக தமிழ்வழியில் படித்தவர்கள் அரசு வேலை கிடைப்பதில் சிரமம் இருந்தது. இதைத் தொடர்ந்து பட்டப் படிப்போடு மட்டுமல்லாமல், 10, 12-ம் வகுப்பையும் தமிழில் படித்திருக்க வேண்டும். அவற்றுக்கான சான்றிதழ்களில் தமிழ் வழிக் கல்வியில் படித்தது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் வரவேற்று மகிழ்வதோடு தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment